இலங்கையர்களுக்கு எச்சரிக்கை முகக்கவசம் அணியாதோர் தனிமைப்படுத்தபடுவர்

மேல் மாகாணத்தில் முகக் கவசம் அணியாது பொது இடத்தில் நடமாடிய மேலும் 39 பேர் அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலைவரை ஆயிரத்து 441 பேர் முகக்கவசம் அணியாத காரணத்தால் அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் கூறினர்.

முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் காணப்படும் நபர்கள் கட்டாயம் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்படுவார்கள் என்ற நடைமுறையை பொலிஸ் தலைமையகம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் நடைமுறைக்கு கொண்டு வந்தது.

இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணிவரை ஆயிரத்து 441 பேர் முகக்கவசம் அணியாத குற்றத்துக்கு வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: