குளிர்சாதனப் பெட்டியில் மீதமுள்ள பாஸ்தாவை சாப்பிட்ட பெண் மரணம்

இத்தாலியில் 27 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குளிர்சாதனப் பெட்டியில் இறால் இருப்பதை அறியாமல், மீதமுள்ள பாஸ்தாவை சாப்பிட்ட பின் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியின் Sicily-யில் இருக்கும் Palermo-வில் வெயிட்டராக பணிபுரிந்து வந்தவர் Refka Dridi. 27 வயது மதிக்கத்தக்க இவர், கடந்த வாரம் வியாழக்கிழமை இவர் வேலையில் இருந்து வீடு திரும்பிய இவர், தன்னுடைய வீட்டில் குளிர்சாதனப்பெட்டியில் இருந்த பாஸ்தாவை சாப்பிட்டுள்ளார்.

ஆனால், உள்ளே இறால் இருந்ததை அறியாமல் சப்பிட்டதால், அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த அவர் உடனடியாக உதவி பெறுவதற்காக அருகில் இருப்பவர்களிடம் தேடி ஓடினார்.

 

அவர்கள் உடனடியாக மருத்துவ உதவிக்கு அழைத்துள்ளனர். ஆனால் மருத்துவ குழு வருவதற்குள் Refka Dridi சரிந்து விழுந்துள்ளார்.

இதையடுத்து அவர் உடனடியாக, மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

வட ஆப்பிரிக்காவின் Tunisia-வை சேர்ந்தவர் Refka Dridi. கடந்த பத்து ஆண்டுகளாக இத்தாலியில் வசித்து வரும் இவர், Palermo-வில் இருக்கும் பிரபல உணவகம் ஒன்றில் வெயிட்டராக பணியாற்றி வந்துள்ளார்.

இவருக்கு திருமணமாகி 8 மாத குழந்தை இருப்பதாகவும், சம்பவ தினத்தன்று அவரின் கணவர் வீட்டில் இல்லை என்றும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

Refka Dridi-ன் மரணம் குளிர்சாதனப் பெட்டியில் இருப்பதை அப்படியே எடுத்து சாப்பிடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக செய்தி என்று தான் கூற வேண்டும்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: