மதுபிரியர்களுக்கு சோகமான செய்தி

பொதுத்தேர்தலினை முன்னிட்டு நாடு முழுவதுமுள்ள அனைத்து மதுபானசாலைகளும் இரண்டு நாட்கள் மூடப்படுமென மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் வாக்கெடுப்புக்கள் இடம்பெற்று முடிந்த நிலையில் தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் மதுபான உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், விற்பனை நிலைய அனுமதி பத்திரமும் இரத்துச் செய்யப்படவுள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பான முறைப்பாடுகளை பொது மக்கள் 1913 இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியுமெனவும் மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

வன்முறைச் சம்பவங்கள் தோற்றம் பெறுவதை தவிர்ப்பதற்கு இரண்டு நாட்கள் மதுபானசாலைகள் மூடப்பட வேண்டுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, மதுவரி திணைக்களத்துக்கு எழுத்து மூலமாக அறிவித்ததை தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: