பாடசாலைகள் மீளவும் 27ம் திகதி ஆரம்பமாக உள்ளது

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது தொடர்பில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் சமூகத்திற்கு அறிவுறுத்தும் வகையில் சுகாதார வழிகாட்டல் ஆலோசனைகளடங்கிய இறுவட்டு ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

கல்வியமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட நிகழ்வின் போது இந்த இறுவட்டு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி சுகாதார வழிகாட்டிகளை உள்ளடக்கிய இந்த இறுவட்டு நாடு முழுவதிலுமுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விநியோகிக்கப்படவுள்ளது.

இதற்கு முன்னரும் கல்வி அமைச்சினால் விசேட சுற்று நிருபம் மற்றும் வழிகாட்டல்கள் அனைத்து பாடசாலைகளுக்கும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதுடன்,நேற்றைய தினம் மேற்படி இறுவட்டு பாடசாலைகளுக்குப் பகிர்ந்தளிப்பதற்காக கல்வி அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் அனுசரணை மற்றும் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்டுள்ள இறுவட்டு பாடசாலை ஆரம்பமாகும் தினத்தில் சகல பாடசாலைகளுக்கும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

பொதுத்தேர்தலினை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும்-07 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதாவது இன்று, நாளை, நாளை மறுதினம் மற்றும் 7ஆம் திகதிகளில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள், கடந்த 27ஆம் திகதி தரம் 11, 12 மற்றும் 13 ஆம் தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக மீளவும் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த நிலையில் பொதுத்தேர்தலை முன்னிட்டு மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: