தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

பிரபல நடிகரும் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ-வுமான கருணாஸூக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 2,68,285 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,08,784 பேர் குணமடைந்திருக்கும் நிலையில் 4,349 பேர் நோய் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியினர், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸுக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதாவது எம்.எல்.ஏவின் உதவியாளருக்கு ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது எம்.எல்.ஏ கருணாஸுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து திண்டுக்கல்லில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இதுவரை 4 அமைச்சர்கள் உட்பட 24 தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: