தமிழ் திரையுலகில் நடிகரான விஜயகாந்திற்கு கொரோனா

நடிகரும், தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகராக கொடிகட்டி பறந்து வந்த நடிகர் விஜயகாந்த், ஒரு கால கட்டத்தில் தேமுதிக என்ற கட்சியை உருவாக்கி, அதில் தலைவராக இருந்து வருகிறார்.

ஆரம்ப கால கட்டத்தில் இந்த கட்சி எதிர்கட்சியாக வந்தது. ஆனால் அதன் பின் தேமுதிகவின் செல்வாக்கு மக்கள் மத்தியில் குறைய ஆரம்பித்தது.

ஆனால், விஜயகாந்த் மீது மக்கள் கொண்டிருந்த அன்பு குறையாமல் இருந்தது. உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், பெரிய அளவில் கட்சி பணிகளில் கவனம் செலுத்தாமல், வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.

 

இந்நிலையில், அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதை தொடர்ந்து, சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில், கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

பரிசோதனையில், தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் எங்கும் செல்லாமல் வீட்டிலே இருந்த மனிதனுக்கு எப்படி கொரோனா, ஏற்கனவே உடல் நிலை சரியில்லை, இதில் கொரோனா வேறா என்று ரசிகர்கள் மற்றும் அவரது கட்சியை சேர்ந்தவர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: