நைஜீரியாவில் பெட்ரோல் கொள்கலன் லொறி தீ பிடித்ததில் பல பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் மத்திய மாநிலமான கோகி நகரின் பிரதான வீதியில் பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழந்துள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

லோகோஜா-அபுஜா நெடுஞ்சாலையில் நேற்று பெட்ரோல் கொள்கலன் லொறி கட்டுப்பாட்டை இழந்து ஐந்து கார்கள், மூன்று முச்சக்கர வண்டிகள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் மோதியது.

இதன் போது ஒரே குடும்பத்தினர் சென்ற கார் ஒன்றில் விழுந்து தீப்பிடித்துள்ளது. இந்நிலையில், பெட்ரோல் கொள்கலன் லொறி தீப்பிடித்து வெடிப்பதற்கு முன்பு காரில் விழுந்து கார் நசுக்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்து சம்பவத்தில் 23பேர் உயிரிழந்ததாகவும், ஒரு குழந்தை காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் மத்திய வீதி பாதுகாப்பு கோகி மாநில துறை தளபதி இட்ரிஸ் ஃபிகா அலி உறுதிப்படுத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. விபத்து சம்பவத்தின் போது 10 வாகனங்களில் இருந்தவர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜனாதிபதி முஹம்மது புஹாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

மத்திய வீதி பாதுகாப்பு ஆணையத்தால் உறுதிப்படுத்தப்பட்ட 23பேரின் மரணம், நம் நாட்டிற்கு ஏற்பட்ட துயர சம்பவங்களின் மற்றொரு குழப்பமான மற்றும் சோகமான சம்பவத்தை பிரதிபலிக்கிறது.

நாட்டில் இந்த துரதிஷ்டவசமான மற்றும் பெரிய அளவிலான துயரங்களின் அதிர்வை குறித்து நான் தீவிரமாக கவலைப்படுகிறேன். இது தேவையற்ற மரணங்களை ஏற்படுத்துகிறது’ எனவும் தெரிவித்துள்ளார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: