சிறுமியின் தற்கொலை காரணமானவர் சிக்கினார்

தமிழகத்தில் 13 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அதிர்ச்சி திருப்பமாக 33 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வேளச்சேரியை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த ஜூன் மாதம் 14- ஆம் திகதி தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில் சிறுமியின் தாயார் செல்போனை ஆய்வு செய்ததில் உன் பெற்றோரிடம் தெரிவித்துவிடுவேன் என்ற குறுந்தகவல் இருந்தது.

மேலும் இதை அனுப்பியது சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்த 33 வயதான குணசீலன் என்கிற நபர் என்பதும் தெரிய வந்தது. சிறுமி தற்கொலை செய்து கொண்ட அதே நாளில் குணசேகரன் மாயாமானார். பின்னர் அவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது குறுந்தகவல் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என மறுத்தார். குணசீலனின் செல்போனைக் கைப்பற்றி, சைபர் கிரைம் பிரிவுக்கு அனுப்பி ஆய்வு செய்து, அழிக்கப்பட்ட பல குறுஞ்செய்தி தகவல்கள் மீட்கப்பட்டன.

 

அதில் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு செய்து மிரட்டல் விடுத்த குறுஞ்செய்தி மட்டுமில்லாமல், சிறுமியுடன் குணசீலன் நெருக்கமாக இருக்கும் படங்கள் மற்றும் சிறுமியின் ஆபாச படங்கள், வீடியோக்களும் இருந்தன.

தற்கொலை செய்து கொண்ட சிறுமியின் பெற்றோர் இரண்டு பேருமே வேலைக்கு சென்றுவிடுவார்கள். இதனால், சகோதரர் முறையில் பழகி வந்த குணசீலன் தான் சிறுமியை பள்ளிக்கு அழைத்துச் சென்று, அழைத்து வந்துள்ளார்.

அண்ணன் போல பழகி வந்த குணசீலனின் மறுமுகம் பெற்றோருக்குத் தெரியவில்லை. இதனால், அவர்களுக்கு எந்தவித சந்தேகமும் எழவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் தான், வீட்டில் தனியாக இருக்கும் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளான் குணசீலன். அதைப் படம் பிடித்து வைத்து, மிரட்டத் தொடங்கியுள்ளான்.

நாளடைவில் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக மிரட்டி பாலியல் ரீதியாக சிறுமியைத் துன்புறுத்தியுள்ளான். ஒரு கட்டத்தில் மன உளைச்சலுக்குள்ளான சிறுமி தனது பெற்றோரிடம் கூறப்போவதாக அழுதுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த குணசீலன், உன் தாயாரின் செல்போனுக்கு என்னிடம் உள்ள ஆபாசப் படங்களை அனுப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளான். இதனால், பயந்து போன சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட குணசீலனிடம் மேலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: