விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 22பேர் கருகி பலி

உக்ரைன் நாட்டில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 22 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

உக்ரைன் நாட்டின் இராணுவ விமானம் ஒன்றில் 25க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இராணுவ விமான தளத்தில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 22 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, கடந்த ஜனவரி மாதம் உக்ரைனில் இடம்பெற்ற விமான விபத்தில் 176 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: