பிரித்தானியாவில் எப்படி கொரோனவை பரப்புகிறார்கள் தெரியுமா?

பிரித்தானியாவில் கொரோனா தொற்று காரணாக இதுவரை சுமார் 42,500 பேர் வரையில் இறந்துள்ளார்கள். 530000 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார்கள். கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 42,542 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் அறிவித்துள்ளது.

பிரித்தானிய அரசாங்கமும் இறுக்கமான கட்டுப்பாடுகள், விதிமுறைகளை நடைமுறைப்படுத்தினாலும், பெரும்பாலான மக்கள் அந்த விதிமுறைகளை மீறும் செயல்களில் ஈடுபடுவதை பரவலாகக் காணக்கூடியதாகவே இருக்கின்றது.

குறிப்பாக Nottingham என்ற இடத்தில் நேற்று இரவு 10 மணியளவில் எடுக்கப்பட்ட சில காட்சிகளை ஒரு ஊடகம் வெளியிட்டுள்ளது.

இளைஞர்கள், யுவதிகள் முகக்கவசங்கள் இல்லாமல், சமூக இடைவெளியைப் பேனாமல், குடித்து. கும்மாளமிட்டு, ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தபடி, ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டும் வீதிகளில் வலம் வருகின்ற காட்சிகளை அவர்கள் படம் பிடித்து வெளியிட்டுள்ளார்கள்.

இரவு 10 மணிக்கு பின்னர் மதுபான சாலைகள், உணவு விடுதிகள் மூடப்பட்டதாக இறிவிக்கப்பட்ட நிலையில் வீதிகளில் இவ்வாறு நடந்துகொள்வதும், காவல்துறையினரின் கண்முன்பாகவே அவர்கள் இவ்வாறு நடந்துகொள்வதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

Nottingham என்ற இந்தப் பிரதேசத்தில் கடந்த 7 நாட்களில் சுமார் 400 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: