விபத்துக்குள்ளான காரில் இருந்தவர்களை மீட்க சென்ற பொலிஸார் கண்டகாட்சி

இந்தியாவில் விபத்துக்குள்ளான காரில் இருந்தவர்களுக்கு பொலிசார் உதவி செய்ய சென்ற போது, காரின் உள்ளே இருந்த 140 கிலோ கஞ்சா போதைப் பொருளைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஆந்திரபிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கேசப்பள்ளி என்ற பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று விபத்து ஏற்பட்டது.

நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார் சாலையின் நடுவே இருந்த டிவைடரில் மோதிய விபத்துக்குள்ளானது. இதனால் இந்த விபத்து குறித்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த பொலிசார், விபத்துக்குள்ளானவர்களை உதவி செய்வதற்காக உள்லே பார்த்த போது,

விபத்துக்குள்ளான காரில் இருந்தவர்கள் காரை அப்படியே விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

 

இதனால் சந்தேகம் அடைந்த பொலிசார், விபத்துக்குள்ளான காரை சோதனை செய்து பார்த்துள்ளனர் அப்போது, காரின் இருக்கை பகுதிகளில் 140 கிலோ அளவிற்கு கஞ்சா போதைப்பொருள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

கார் விபத்துக்குள்ளானதால் பொலிசாரிடம் சிக்கிக்கொள்வோம் என்ற அச்சத்தில் கஞ்சா கடத்தல் கும்பல் காரை அப்படியே விட்டு விட்டு தப்பிச்சென்றிருப்பது அதன் பின் பொலிசாருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து, விபத்துக்குள்ளான காரையும், அதில் இருந்த 140 கிலோ கஞ்சாவையும் கைப்பற்றிய பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: