தமிழகத்தில் மனைவியை கழுத்தை அறுத்து துடி துடிக்க கொன்ற கணவன்

நடத்தையில் சந்தேகப்பட்டு, மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டாவைச் சோ்ந்தவா் மணிகண்டன். 30 வயதான இவா் ஒசூா் சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவருக்கும் பெங்களூருவைச் சோ்ந்த சிந்துஜா என்பவருக்கும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதிக்கு 3 வயதில் குழந்தை உள்ளது.

கணவன், மனைவி இருவரும் குழந்தையுடன் ஒசூா், லட்சுமி நாராயண நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்த நிலையில், மணிகண்டனுக்கு, மனைவி சிந்துஜாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.

 

இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை காலை கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், கத்தியால் சிந்துஜாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

அதன்பிறகு, மணிகண்டன் ஒசூா் அட்கோ காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். மணிகண்டன் சொன்னதைக் கேட்டு பதறி போன பொலிசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, மணிகண்டனிடம் விசாரித்த போது, மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: