பிரான்சில் ஆசிரியர் ஒருவரை பயங்கரவாதி கத்தியால் குத்திக் கொலை

பிரான்ஸின் பாரிஸ் நகரில் பயங்கரவாத தாக்குதல் ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

இச்சம்பவம் நகரின் மையத்திலிருந்து 25 மைல் தொலைவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், பாடசாலை ஆசிரியர் ஒருவரை பயங்கரவாதி கத்தியால் குத்திக் கொலை செய்த பின் தப்பிச்செல்ல முற்பட்டவேளை பொலிஸாரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

பயங்கரவாதி இறக்கும் போது அல்லாஹு அக்பர் என கத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி வெடிக்கும் பொருட்களாலான ஆடையை அணிந்திருந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: