இலங்கையை தாக்கும் இன்னொரு நோய் மக்களே அவதானம்

இந்த வருடத்தில் இதுவரை நாட்டின் 27,986 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை 53 பொதுசுகாதார சேவை அதிகாரிகள் பிரிவில் மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சு தெரிவிக்கையில்,

நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுவதால் பல்வேறு பிரதேசங்களிலும் டெங்கு நோய் அதிகரிப்பு காணப்படுகின்றது.

டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் பல்வேறு இடங்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அலை டெங்கு நுளம்பு எச்சரிக்கை பிரதேசமாக இனங்காணப்பட்டுள்ளது.

147 சுகாதார பரிசோதகர் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லையென்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

1980 ஆம் ஆண்டு நாட்டில் கூடுதலான டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கிணங்க இந்த வருடத்தில் இதுவரை 27,986 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் இது கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் 50 வீதமாக குறைந்துள்ளதை குறிப்பிடமுடியும். குறிப்பாக வடக்கு கிழக்கு உட்பட பல்வேறு பிரதேசங்களிலேயே டெங்கு நோய் அதிகரிப்பு காணப்படுகின்றது என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: