இலங்கையில் மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இளைஞன் உயிரிழப்பு

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கித்துள் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, மண்மேடு திடீரென இடிந்து விழுந்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் இலுப்பட்டிச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த இராஜசுந்தரம் சஜிந்தன்(20) என்பவரே பலியாகியுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: