மனைவியின் கொடுமை தாங்க முடியாது கணவன் தற்கொலை

வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய புதுமாப்பிள்ளை மனைவி மற்றும் குடும்பத்தார் கொடுத்த தொல்லையால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தமிழகத்தின் தேனியை சேர்ந்தவர் கோபிநாத் (30). இவருக்கும் ஜெயப்பிரியா (23) என்ற பெண்ணுக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது.

வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த கோபிநாத் திருமணத்துக்கு பின்னர் சவுதி அரேபியாவுக்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து ஜெயப்பிரியா தனது தாய் வீட்டில் இருந்தார். கடந்த 13ஆம் திகதி வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய கோபிநாத் மனைவியை அழைக்க மாமியார் வீட்டுக்கு சென்ற போது அவர் வர மறுத்துள்ளார்.

 

இதோடு கோபிநாத்தின் தாய் விமலா, அண்ணன் நிஜந்தன் மற்றும் உறவினர்கள் சேர்ந்து கோபிநாத்தை திட்டினர்.

இதையடுத்து விரக்தியுடன் வீடு திரும்பிய கோபிநாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் கோபிநாத் சடலத்தை கைப்பற்றியதோடு அவர் எழுதிய கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.

அதில், எனக்கு வாழ விருப்பம் இல்லாததால் நான் உயிரை மாய்த்து கொள்கிறேன்

என் சாவுக்கு 7 பேர் காரணம். உண்மையான நீதி கிடைத்த பிறகே என் உடலை எரிக்க வேண்டும்.

என் சாவுக்கு காரணமான ஜெயப்பிரியா (மனைவி), பிரேம்குமார் (மாமனார்), கமலா (மாமியார்), நிஜந்தன் (மைத்துனர்), ஜெயப்பிரியாவின் உறவினர்கள் விமலா, வாசியம்மாள், நர்மதா ஆகியோருக்கு உண்மையான தண்டனை கிடைக்க வேண்டும் என எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து பொலிசார் கோபிநாத்தின் மனைவி, மாமியார் உள்ளிட்ட நால்வரை கைது செய்த நிலையில் மூவரை தேடி வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில் கோபிநாத்தின் சம்பள பணம் கேட்டு மனைவி மற்றும் அவருடைய குடும்பத்தினர் தொல்லை கொடுத்ததும் அதன் காரணமாக சவுதியிலேயே அவர் 10 நாளுக்கு முன்னர் தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: