சுகாதாரத்துறையின் உத்தரவை மீறி செயல்பட்ட சாரதி

அண்மையில் கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபட்ட இ.போ.ச. பேருந்தில் கொரோனா நோயாளர் ஒருவர் பயணம் மேற்கொண்ட பேருந்தின் சாரதியை தனிமைப்படுத்துமாறு சுகாதாரத்திணைக்களம் வவுனியா சாலைக்கு அறிவித்தல் வழங்கிய போதிலும் அதனை குறித்த சாலையின் முகாமையாளர் கவனத்தில் எடுக்கவில்லையென ஊழியர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

சாரதியை தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்குட்படுத்தாமல் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் – கண்டி பேருந்து சேவையில் ஈடுபடுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில்எஅவர்கள் மேலும் தெரிவிக்கும்போது ,

அண்மையில் இ.போ.ச பேருந்தில் கொரோனா நோயாளர் ஒருவர் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதை கண்டறிந்த சுகாதார திணைக்களம் வவுனியா சாலை முகாமையாளருக்கு குறித்த கண்டி யாழ்ப்பாண இ.போச , பேருந்து சாரதியை தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்குட்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கியிருந்தது.

 

எனினும் இவ் அறிவுறுத்தல்களை புறம் தள்ளிவிட்டு நேற்று குறித்த பேருந்து சாரதியை மீண்டும் சேவையில் ஈடுபடுத்தும் நடவடிக்கை சாலை முகாமையாளரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது .

இவ்வாறு சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல்களை உதாசீனப்படுத்தி சேவையில் ஈடுபட்டு வருகின்றமையினால் ஏனைய சாரதிகள் நடத்துனர்களும் சாலையில் பணியாற்றும் ஊழியர்களும் பாதிக்கப்பட வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் குறித்த சாரதிக்கு பி.சி.ஆர் மருத்துவப்பரிசோதனை மேற்கொண்டு மீளவும் சேவையில் ஈடுபடுத்துமாறு தெரிவித்துள்ளனர் .

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: