வெளிநாட்டில் இருக்கும் கணவனுடன் தொலைபேசியில் உரையாடியவாறே இறந்த மனைவி

வெளிநாட்டில் வசிக்கும் கணவருடன் வீடியோ அழைப்பில் பேசி கொண்டிருக்கும் போதே விஷம் குடித்த மனைவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் செல்வராஜ் (36). இவர் ஓமனில் உள்ள எண்ணெய் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி ஆக்னஸ் நந்தா (31). தம்பதிக்கு திருமணமாகி ஐந்தரை ஆண்டுகள் ஆகும் நிலையில் நான்கு வயதில் ஒரு மகளும், இரண்டரை வயதில் ஒரு மகனும் உள்ளனர். கணவர் வெளிநாட்டில் இருப்பதால், தனது பெற்றோர் வீட்டில் ஆக்னஸ் நந்தா, தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக போனில் பேசும் போது கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினமும் கணவருடன் நீண்டநேரம் வீடியோ அழைப்பில் ஆஞஸுக்கு தகராறு நடந்துள்ளது.

 

இந்த தகராறின்போது வீடியோ அழைப்பில் பேசிக் கொண்டு இருக்கும்போதே, திடீரென தனது கையில் இருந்த பூச்சி மருந்து பாட்டிலை திறந்து குடித்த ஆக்னஸ், கணவருக்கு பை.. பை… என சொல்லியவாறு போன் இணைப்பை துண்டித்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியில் நிலைகுலைந்த செல்வராஜ் உடனடியாக உறவினர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

பதறி போன அவர்கள் படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது வாயில் நுரை தள்ளிய நிலையில் ஆக்னஸ் நந்தா உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.

இதையடுத்து அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆக்னஸ் நந்தா உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: