திருமண சடங்கோன்றிற்கு சென்ற மாணவன் கிணறு ஒன்றிலிருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி – கட்டைக்காடு பகுதியில் வசிக்கும் மாணவன் ஒருவர் தருமபுரம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தருமபுரம் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மோகநாதன் தர்சன் (18) எனும் மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிய வருகையில், தருமபுரம் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றுக்கு நேற்றையதினம் சென்ற மாணவன் வீடு திரும்பாத காரணத்தினால் உறவினர்கள் பல இடங்களிலும் தேடியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த மாணவன் தருமபுரம் பகுதியில், கிணறு ஒன்றிலிருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் தருமபுரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: