பாடசாலை ஒன்றினுள் ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 6 மாணவர்கள் பலி

பாடசாலையொன்றுக்குள் , திடீரென புகுந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 6 மாணவர்கள் தமது உயிரைவிட்ட பரிதாப சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் மத்திய ஆபிரிக்க நாடான மத்திய கமரூனில் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பினரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. எனினும் கமரூனில் ஆங்கிலோஃபோன் எனும் பிரிவினைவாத குழுக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் மோதல் போக்கு இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

எனவே இந்த தாக்குதல் பிரிவினைவாதிகளால் நடத்தப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இத்தாக்குதலில் 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மனித நேய விவகார ஒருங்கிணைப்புக்கான ஐ.நா. அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

சில குழந்தைகள் துப்பாக்கிச்சூட்டுக்கு பயந்து இரண்டாவது மாடியிலிருந்து குதித்ததில் படுகாயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: