யாழில் இருவருக்கு கொரோனா

பேலியகொட கொத்தணியுடன் தொடர்புபட்டு யாழில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் குருநகர் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றும் இரண்டு பேருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் குருநகரையும் மற்றையவர் பருத்தித்துறையையும் சேர்ந்தவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இருவரம் இனம் காணப்பட்டு குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் சற்று முன்னர் உறுதிப்படுத்தினார்.

 

இந்த நிலையில் இரண்டு பேரும் கோவிட் -19 சிகிச்சை நிலையங்களுக்கு மாற்றப்படுவதுடன், அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் தொடர்ந்து சுயதனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் கூறினர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: