யாழில் கார் மின் கம்பத்துடன் மோதியதில் காரின் சாரதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இருந்து இராச வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் காரின் சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இராச வீதி ஊடாக வேகமாக பயணித்துக் கொண்டிருந்த குறித்த கார் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் வாகனத்தின் சாரதியான வசாவிளான் பகுதியை சேர்ந்த தனபாலசிங்கம் லஷ்ச தீபன் (வயது 34) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருடன் பயணம் செய்த சிவன் சரல தீபன்(வயது 23) பலத்த காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: