இலங்கையை சேர்ந்த இளைஞன் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்

ஜோர்தானில் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த வெயாங்கொடையைச் சேர்ந்த இளைஞன் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்த நிறுவனத்தில் ஏராளமானவர்கள் நோய்வாய்ப்பட்டவர்களாக இருப்பதுடன் உதவியற்றவர்களாக இருப்பதாகவும் இறந்தவரின் உறவினர்கள் கூறியுள்ளனர்.

ஒரு வருடம் எட்டு மாதங்களுக்கு முன்பு வேலைக்காக ஜோர்தானுக்குச் சென்ற வெயாங்கொடையைச் சேர்ந்த திருமணமாகாத 38 வயதுடைய சம்பத் ஹன்சக சிரிவர்தன என்பவரே உயிரிழந்துள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் மேலும் இரண்டு இலங்கையர்களுக்கும் கொரோனா நோய்த்தொற்று உறுதியானதுடன், அவர்கள் தனித்தனியாக வசித்து வருவதாகவும், கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை திருப்பி அனுப்பும் இலங்கை நிறுவனமும் தற்போது செயலற்ற நிலையில் உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உதவியற்றவர்களாக இருக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்கும் அல்லது அவர்களை கவனித்துக்கொள்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: