அமெரிக்க தேர்தல் முடிவை ஏற்க மறுக்கும் ட்ரம்ப்

அமெரிக்க தேர்தல் முடிவை ஏற்க பிடிவாதத்துடன் ட்ரம்ப் மறுப்பது அமெரிக்காவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருவதுடன், அமெரிக்கர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

டொனால்ட் ட்ரம்ப், தனது தோல்வியை ஏற்றுக்கொண்டதும் ஜோ பைடன் வெற்றியை முறைப்படி அறிவிப்பார்கள் என்பதால், அந்நாட்டில் செயல்பட்டு வரும் சமூக அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினரும் ட்ரம்ப் பிடிவாதம் பிடிக்காமல் அதிபர் மாளிகையை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே, அவரது சொந்த குடும்பத்தில் இருந்தும் ட்ரம்ப்புக்கு அறிவுரைகள் சென்றுள்ளன. டிரம்ப்பின் பிடிவாதத்தை அமெரிக்க மக்கள் ஏற்கவில்லை. அவர் தனது தோல்வியை ஏற்றுக் கொண்டு அதிபர் மாளிகையில் இருந்து கௌரவமாக வெளியேற வேண்டும் என்று அவரது மருமகன் ஜேரட் குஷ்னர் மற்றும் ட்ரம்ப்பின் மனைவி மிலானியா ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனிடையே, வெள்ளை மாளிகைக்கு செல்வதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை ஜோ பைடன் தொடங்கி உள்ளார்.

BuildBackBetter.com என்ற பக்கத்தை தொடங்கி நிர்வாகப் பணிகளை முதல் நாளில் இருந்தே தொடங்குமாறு தமது ஆதரவாளர்களுக்கு ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகிய இருவருமே அழைப்பு விடுத்துள்ளனர்.

கொரோனா, பொருளாதார மீட்பு, இன சமத்துவம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனவரி மாதம் பதவி ஏற்பு விழா நடக்க இருந்தாலும் அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தொடங்கி விட்டன. சட்டரீதியாக சில நடவடிக்கைகள் முதலில் மேற்கொள்ளப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கி விட்டன.

அதேபோல், ஜோ பைடன் பதவி ஏற்பதற்கு முன்பாக வெள்ளை மாளிகையில் அவர் தங்குவதற்கு ஏற்ற வகையில் மாற்றங்கள் செய்யப்படும். அதற்கான வேலைகளும் தொடங்கியுள்ளன.

பதவி ஏற்பு விழாவுக்கு யார் யாரை அழைப்பது என்பன உள்ளிட்ட அலுவல் ரீதியான திட்டங்களும் வகுக்கப்பட்டு வருகின்றன.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: