ஹெலிகொப்டர் விபத்தில் 8 பேர் பலி

எகிப்தின் சினாய் பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் ஆறு அமெரிக்கர்கள் உட்பட எட்டு அமைதி காக்கும் படையினர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒரு வீரர் காயமடைந்துள்ளார் என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான 1978 சமாதான உடன்படிக்கையை அமுல்படுத்துவதை மேற்பார்வையிடும் சர்வதேச பணியின் ஒரு பகுதியாக அமைதி காக்கும் படையினர் குறித்த பகுதியில் கடமையில் உள்ளனர்.

வழமையான ரோந்து நடவடிக்கையின் போதே இந்த ஹெலிகொப்டர் விபத்து இடம்பெற்றுள்ளது.

வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த விபத்தில் ஆறு அமெரிக்க வீரர்களும் பிரான்ஸ் மற்றும் செக் குடியரசின் ஒரு வீரரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்களையும், விபரங்களையும் இன்னும் உத்தியோகபூர்வாக வெளிானவில்லை. அத்துடன் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: