இந்தோனேஷியாவில் கூரையை பிய்த்துக்கொண்டு வந்த அதிஷ்ரம்

இந்தோனேஷியாவில் கூரையை பிய்த்துக் கொண்டு விழுந்த விண்கல் மூலம் நபர் ஒருவர் இப்போது மில்லியனராக மாறியுள்ளார்.

இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்ராவின் Kolang-ல் Josua Hutagalung என்ற 33 வயது நபர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவர் சவப்பெட்டி தயாரிக்கும் தொழிலில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவரின் வீட்டின் கூரைப் பகுதியை ஏதோ பொருள் ஒன்று உடைத்து கீழே விழுவது போன்று இருந்தது.

இதனால் Josua Hutagalung அது என்னவென்று பார்க்க சென்ற போது, அது ஒரு விண்கல் போன்று இருந்துள்ளது. அதை தொட முயற்சித்த போது சூடாக இருந்துள்ளது.

அதன் பின் அதை மண்வெட்டி கொண்டு வெளியில் எடுத்த பின்பு, அது ஒரு விண்கல் என்பதும் பல மில்லியன் மதிப்பு கொண்டது என்பதும் தெரியவந்துள்ளது.

 

இது குறித்து Josua Hutagalung கூறுகையில், அன்றைய தினம் சத்தம் மிகவும் அதிகமாக இருந்தது. ஒரு சில வீடுகள் எல்லாம் குலுங்கின.

நான் வீட்டை சுற்றி தேடிய போது, கூரை தகரம் உடைந்திருப்பதைக் கண்டேன்.

அதன் பின், நான் கீழே பார்த்த போது இது இருந்தது. இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் பலரும் விண்கல் என்று கூறினர். நான் யாரும் உள்ளூர்வாசிகள் வேண்டும் என்றே கல்லை எறிந்துவிட்டு சென்றார்களா என்று நினைத்தேன்.

இந்த அரிய கல்லை பார்ப்பதற்கு மக்கள் குவிந்து வருகின்றனர், கல்லை அவர்கள் பார்க்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

 

அதன் பின் இந்த விண்கல் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான விண்கல், இதற்காக அவருக்கு 1.4 மில்லியன் பவுண்ட், அதாவது அவருடைய 30 வருட சம்பளத்திற்கு சமமான தொகை கொடுக்கப்பட்டு வாங்கப்பட்டது.

அமெரிக்க விண்கல் நிபுணர் கொலின்ஸ் உடனடியாக இந்த விண்கல்லை அமெரிக்காவிற்கு அனுப்பினார். அங்கு

இண்டியானாபோலிஸைச் சேர்ந்த மருத்துவரும் விண்கல் சேகரிப்பாளருமான ஜெய் பியடெக் வாங்கினார் என்று அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள சந்திர மற்றும் கிரக நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இந்த விண்கல் CM1 / 2 கார்பனேசிய சோண்ட்ரைட் என வகைப்படுத்தப்பட்டுள்ளது, இது மிகவும் அரிதான வகை என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆக்ஸ்ட் மாதம் நடந்த சம்பவத்தின் போது, விண்கற்களின் மேலும் மூன்று துண்டுகள் அருகிலுள்ள பகுதிகளில் காணப்பட்டன, அதில் ஒன்று Josua Hutagalung வீட்டிலிருந்து 3 கி.மீற்றக்கு குறைவான நெல் வயலில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதிகாரப்பூர்வமாக கோலாங் என்று பெயரிடப்பட்ட இந்த விண்கல் மொத்த எடை 2.5 கிலோ எடையுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள சந்திர மற்றும் கிரக நிறுவனம் தெரிவித்துள்ளது.

விண்கல்லின் உட்புறம் அடர் சாம்பல் மற்றும் கருப்பு, சிறிய வெளிர் நிற புள்ளிகள் உள்ளன.

இது ஒரு பாறை விண்கல் என்று தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி அமைப்பின் (லாபன்) தலைவர் தாமஸ் ஜமாலுதீன் பிரபல ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ஒரு விண்கல் ஒரு குடியிருப்பு பகுதியில் விழுவது ஒரு அரிய நிகழ்வு என்று அவர் கூறினார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: