திருகோணமலையில் முச்சக்கர வண்டி மாட்டுடன் மோதுண்டத்தில் சாரதி மரணம்

திருகோணமலை – நிலாவெளி பிரதான வீதி முருகாபுரி பகுதியில் முச்சக்கர வண்டியொன்று மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை மூன்றாம் கட்டை வளர்மதி வீதியில் வசித்து வரும் இலங்கை போக்குவரத்துச் சபையின் திருகோணமலை கிளையில் காப்பாளராகக் கடமையாற்றி வரும் தங்கராஜா அருணன் (36வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டியில் தனது தந்தையை மரத்தடி பகுதியில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்று மீண்டும் அவரது வீட்டுக்கு வருகை தந்து கொண்டிருந்த போதே முருகாபுரி பகுதியில் குறுக்கே வந்த மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இதன்போது உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: