இரு தோழிகளின் அதீத அன்பு மரணத்தில் கொண்டு சென்றது

இந்தியாவில் திருமணம் நடந்தால் பிரிவை சந்திப்போம் என்ற பயத்தில் உயிர் தோழிகள் இருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை சேர்ந்தவர் அணில்குமார். இவர் மகள் அமிர்தா (21). இவர் தோழி ஆர்யா (21). இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வந்த நிலையில் இணைபிரியா தோழிகளாக இருந்தனர்.

மேலும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வந்தனர்.

இந்த நிலையில் அமிர்தாவுக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். இதற்காக பல இடங்களில் மாப்பிள்ளை தேடி வந்தனர். இது குறித்து அமிர்தா தனது தோழியான ஆர்யாவிடம் தெரிவித்தார்.

தனக்கு திருமணம் ஆனால் உன்னை விட்டு பிரிந்து செல்ல வேண்டியது வரும், எனவே நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அவர் தனது தோழியிடம் உறுதியுடன் கூறி உள்ளார்.

இதை அவரின் பெற்றோரிடம் தெரிவித்ததால், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் அவர்கள் அமிர்தாவுக்கு அறிவுரை கூறி திருமணம் செய்துகொள்ள கூறினார்கள். அதை அவர் தனது தோழியிடம் கூறினார். எனவே அவர்கள் இருவரும் மனவருத்தத்தில் இருந்தனர்.

 

வாழும்போதுதான் சேர்ந்து வாழ முடியவில்லை. எனவே சாகும்போதாவது ஒன்றாக சாவோம் என்றுக்கூறி அவர்கள் இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி கடந்த 14-ந் திகதி தீபாவளி அன்று வெளியே சென்று வருகிறோம் என்று வீட்டில் கூறிவிட்டு அமிர்தா மற்றும் ஆர்யா வீட்டைவிட்டு வெளியேறினர்.

பின்னர் அவர்கள் இருவரும் அன்று இரவு 7 மணிக்கு வைக்கம் அருகே செல்லும் மூவாற்றுப்புழா ஆற்றுக்கு வந்தனர்.

பின்னர் 2 பேரும் சேர்ந்து கைகளை கோர்த்தவாறு செம்பு முறிஞ்சபுழா பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்தனர். இது குறித்து தகவலறிந்த இருவரின் பெற்றோரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்த நிலையில் பொலிசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவிகள் 2 பேரின் உடல்களை தேடினர்.

ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் பூச்சாக்கள் காயலில் கிடந்த அமர்தாவின் உடல் மற்றும் மூவாற்றுப்புழா ஆற்றில் மிதந்த ஆர்யாவின் உடல் மீட்கப்பட்டது.

இதையடுத்து இருவரிம் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் பொலிசார் இது தொடர்பில் விசாரித்து வருகின்றனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: