இலங்கையை சேர்ந்தவர் பிரான்சில் படுகொலை

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வந்த தமிழர் ஒருவர் பரிஸ் புறநகர் பகுதியான வல் து வாஸ் மாவட்டத்திலுள்ள குசன்வில் பகுதியில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – தெல்லிப்பளையைச் சேர்ந்த 56 வயதான பொன்னையா ஜீவராஜா என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவர் நவம்பர் 18ஆம் திகதி அன்று அவரது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் தனது நண்பர்கள் மூவரினால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என பிரெஞ்சு AFP செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தில் மூவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மூவரும் ஈழத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: