குடும்ப தகராறு காரணமாக ஒருவர் கைது

வவுனியா -சிதம்பரபுரம், கற்குளம் 4 பகுதியில் குடும்ப சண்டை காரணமாக கத்திக்குத்துக்கு இலக்காகி மூவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்படடுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்ற கணவன்,மனைவிக்கிடையில் இன்று ஏற்பட்டுள்ள வாய்த்தர்க்கமே பிரச்சினைக்கான காரணமென விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதன்போது குறித்த குடும்பஸ்தர் தனது மனைவி, மாமி, மாமியாரின் தாயார் ஆகியோர் மீது கத்தியினால் குத்திய நிலையில், அவர்கள் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் காயமடைந்த பெண்ணின் கணவரான 32 வயதுடைய குடும்பஸ்தர் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: