யாழில் குழிக்குள் வீழ்ந்து சிறுவர்கள் இருவர் மரணம்

மண்டைதீவில் வயலுடன் இணைந்திருந்த சிறிய குழிக்குள் வீழ்ந்து சிறுவர்கள் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சோக சம்பவம் இன்று (நவ. 21) சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

மண்டைதீவைச் சேர்ந்த சகோதரர்களான சாவிதன் (வயது-7) சார்வின் (வயது -5) ஆகிய இருவருமே கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்தனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.

சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இன்று மாலை 5.30 மணியளவில் தந்தையார் பணியில் இருந்தவேளை சுற்றத்தில் விளையாடிய சிறுவர்கள் இருவரும் வயல் வெளியில் பெக்கோ இயந்திரம் மூலம் வெட்டிய குழியில் தவறி வீழ்ந்த போது அதிலிருந்த சேறும் சகதியிலும் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த சிறுவர்களின் தாயார் அச்சுவேலி பகுதியில் மருத்துவமாதுவாக பணியாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: