வறுமையோடு வாழும் இப்பெண்ணுக்கு யாராவது உதவ முன்வாருங்கள்

கொடிது கொடிது வறுமை கொடிது! அதனினும் கொடிது இளமையில் வறுமை…. அந்த வகையில் ஆணின் தலைமைத்துவம் இன்றிய குடும்பங்கள் எண்ணவோ இன்றும் பல ஆறாவடுக்களுடன் துயரத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக கணவனை விட்டுப் பிரிந்து தாயாருடன் வசித்து வரும் நிலையில் தனது பிள்ளைகளை வளர்ப்பதற்கு கடுமையாக போராடி வருவதாக பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் தனது துயரத்தினை எம்மோடு பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

அந்த வகையில்,முல்லைத்தீவு -சுதந்திரபுரம், புதுக்குடியிருப்பு பகுதினைச் சேர்ந்த ஜெயரட்ணம் சாந்தினி குடும்பத்தினர் வறுமையுடன் தனது வாழ்வில் அனுபவிக்கும் துன்பங்களும், துயரங்களும் குறித்து இன்னும் சொல்லப்படாதவை ஏராளம். ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.

சொந்தமாக வீடு இல்லை, கிணறு வசதி இல்லை மற்றும் வருமானத்தைத் தேடும் எந்த வழிகளுமின்றி சிரமப்படுவதாக தனது துயரங்களை கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் தனது வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஐ.பி.சி தமிழின் ‘என் இனமே என் சனமே’ என்ற காணொளி ஊடாக இவ்வாறு பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.

இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: