மர்மமான முறையில் தோன்றிய தூண் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் பூங்கா ஒன்றில் 9அடி உயர உலோக மர்ம தூண் ஒன்று மீண்டும் நிறுவப்பட்டுள்ளது.
மோனோலித் எனப்படும் இந்த மர்ம உலோகத்தூண் கடந்த ஆண்டு நவம்பர் 18 ஆம் திகதி உடா பாலைவனத்தில் முதன் முறையாக தோன்றியது. தொடர்ந்து ருமேனியா, இங்கிலாந்து, நெதர்லாந்து, கொலம்பியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, போலந்து என பல்வேறு நாடுகளில் இவை தோன்றின.
இந்த நிலையில் தற்போது மீண்டும் அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாண பூங்கா ஒன்றில் 9அடி உயர உலோகத் தூண் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தூண் இரும்புக்கு பதிலாக அலுமினியம் மற்றும் பிளைவுட்டுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- Previous இனந்தெரியாத நபர்கள் கடத்தி செல்லப்பட்ட தேரர் எரிக்கப்பட்ட நிலையில்
- Next தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது
You may also like...
Sorry - Comments are closed