மனைவியின் முறையற்ற தொடர்பால் கணவன் தற்கொலை

தமிழகத்தில் மனைவியின் முறையற்ற தொடர்பால், அவமானம் தாங்க முடியாமல் கணவன் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், சாமுண்டிபுரம். நாகாத்தம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் பாண்டியராஜன்(27). இவருக்கு சித்ரா(21) என்ற மனைவியும், ஐந்து வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.
பாண்டியராஜன் லோடு மேனாக வேலை செய்து வருகிறார். சித்ரா அங்கிருக்கும் பனியன் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், சித்ராவிற்கும் அங்கிருக்கும் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்த அருண் (22) என்பவர் பழக்கம் ஆகியுள்ளார்.
ஆரம்பத்தில் நட்பாக இருவரும் பழகி வந்த நிலையில், அதன் பின் இருவரும் நெருங்கி பழகும் அளவிற்கு மாறிவிட்டனர்.
இது குறித்த விவரம், பாண்டியராஜனுக்கு தெரியவர, மனைவி சித்ராவை கண்டித்துள்ளார். ஆனால் சித்ராவோ எனக்கு அவருடன் தான் வாழ ஆசை, என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
எவ்வளவு சொல்லியும் மனைவி கேட்காததால், கடும் விரக்தியில் இருந்த பாண்டியராஜன் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை அவர் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸாக வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
- Previous நினைவு தூபி இடிக்கப்பட்டது தொடர்பாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் மயூரனின் கருத்து
- Next ஹர்த்தாலுக்கு முஸ்லிம் சமுகம் பூரண ஆதரவு வழங்குகிறது
You may also like...
Sorry - Comments are closed