இந்தோனேசிய விமானம் விபத்துக்குள்ளாகியது

இந்தோனேசிய விமானம் விபத்துக்குள்ளான கடல் பகுதியில் இருந்து உயிரிழந்தவர்களின் உடல்கள் மற்றும் விமானசிதறல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்தில் இருந்து நேற்று 62 பேருடன் புறப்பட்டுச் சென்ற போயிங் விமானம் சிறிது நேரத்தில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து விமானம் விழுந்த ஜாவா கடல் பகுதியில் மீட்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது.
நேற்று நடந்த மீட்பு பணியின்போது விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்த பாகங்கள் காணாமல் போன விமானத்தின் பாகங்கள்தானா? என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஜாவா கடற்பகுதியில் தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வரும் நிலையில், இன்று மனித உடல்களின் பாகங்கள் மற்றும் உடைகளை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.
எனவே, விமானம் ஜாவா கடற்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது கிட்டத்தட்ட உறுதி ஆகி உள்ளது. விமனத்தில் பயணித்த பயணிகளில் எவரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.
- Previous ஹர்த்தாலுக்கு முஸ்லிம் சமுகம் பூரண ஆதரவு வழங்குகிறது
- Next திருகோணமலையில் தங்கப் புதையல் கண்டுபிடிப்பு
You may also like...
Sorry - Comments are closed