இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்ட நபர் மரணம்

இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதித்து இந்திய மருந்து தரக்கட்டுப்பாடு உத்தரவிட்டது.

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் போபாலில் கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தீபக் மராவி என்ற தன்னார்வலர் திடீரென உயிரிழந்துள்ளார்.

கடந்த மாதம் 12ஆம் திகதி தடுப்பூசி போட்டுக்கொண்டு வீடு திரும்பிய தீபக் மராவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து 21ஆம் திகதி அவர் உடல்நிலை மோசமடையவே, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

எனினும் மருத்துவமனைக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் தீபக் உடலில் விஷம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தீபக்கின் உயிரிழப்புக்கும், தங்களது தடுப்பூசிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கோவாக்சின் தடுப்பூசியை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: