திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

திருகோணமலை- ஹொரவ்பொத்தானை பிரதான வீதி கன்னியா கற்குவாரி வளைவில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் புல்மோட்டை அரபாத் நகர் பகுதியைச் சேர்ந்த என்சிலூன் முஜிபுர் ரஹ்மான் (29வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,விபத்து தொடர்பில் விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- Previous குழந்தைக்காக போராடும் தாய்க்கு யாராவது உதவ முன்வாருங்கள்
- Next இலங்கையில் நான்கு இடங்களில் தங்கம் கண்டுபிடிப்பு
You may also like...
Sorry - Comments are closed