,மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேத்துச்சேனைக் கிராமம் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.கிராமங்களின் உள்வீதிகள் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்,மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பகுதியில் அமைந்துள்ள வேத்துச்சேனைக் கிராமம் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வெள்ளநீர் கிராமத்திற்குள் முற்றாக புகுந்துள்ளதுடன், அக்கிராமத்திலுள்ள பெரும்பாலான வீடுகளுக்குள்ளும் உட்புகுந்துள்ளதாக அக்கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மழை வெள்ளம் வீடுகளுக்குள் உட்புகுந்ததனால் தமது உடமைகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும்,கிராமத்தில் மேற்கொண்டிருந்த மேட்டு நிலப்பயிற்செய்கை உள்ளிட்ட விவசாயச் செய்கைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாகவும் வேத்துச்சேனைக் கிராம மக்கள் அங்கலாய்கின்றனர்.

வேத்துச்சேனைக் கிராமத்திற்குச் செல்லும் தரை வழிப்போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளதனால் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அம்மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனால் வேத்துச்சேனைக் கிராமத்திலுள்ள 89 குடும்பங்களைச் சேர்ந்த 267 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், தற்போது இயந்திரப்படகு மூலம் வெள்ளத்தினால் தனிமைப்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள வேத்துச்சேனைக் கிராம மக்களுக்கு சமைத்த உணவு வழங்குவதற்கு போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: