வவுனியா – தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் மூடப்படும்

வவுனியா – தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட நகர கோட்ட பாடசாலைகளை நாளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற அவசர கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
வவுனியா நகரைசேர்ந்த 2000 பேரினது பி.சி.ஆர் முடிவுகள் வரும் வரைக்கும், வவுனியா நகரை அண்மித்த நெளுக்குளம், தாண்டிக்குளம், பூந்தோட்டம், மூன்றுமுறிப்பு, மடுக்கந்தை ஆகிய பகுதிகளில் சோதனை நிலையங்களை அமைத்தும் அதற்குட்பட்ட பகுதிகளுக்குள் முடக்க நிலைமையை ஏற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதனை கருத்தில் கொண்டு வவுனியா நகர கோட்டத்திற்குட்பட்ட42 பாடசாலைகளை நாளைய தினம் மூட தீர்மானித்துள்ளதுடன் செட்டிகுளம் கோட்டம் மற்றும் வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட இரண்டு கோட்ட பாடசாலைகளினதும் கல்வி செயற்பாடுகளை வருகைதரும் ஆசிரியர்களை கொண்டு நாடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முடக்கப்பட்ட பகுதியில் இருந்து, இயங்கும் பாடசாலைகளுக்கு செல்லும் ஆசியரியர்கள் கடமைக்கு செல்ல தேவையில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- Previous ,மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேத்துச்சேனைக் கிராமம் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது
- Next வவுனியா நகரை முடக்க திட்டமிடப்பட்ட்து
You may also like...
Sorry - Comments are closed