மொனராகலை நகரப்பகுதியில் புடவைக்கடையில் பணியாற்றிய 8 பேருக்கு கொரோனா

மொனராகலை நகரப்பகுதியில் உள்ள புடவைக்கடை ஒன்றில் பணியாற்றிய எட்டுப் பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்து நகரத்தில் உள்ள அனைத்து கடைகளையும் மூடுவதற்கு மொனராகலை பிரதேச சபை மற்றும் மொனராகலை வர்த்தகர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நகரப்பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் பணியாற்றுவோருக்கு பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த முடிவு வரும் வரை கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மொனராகலை பிரதேசசபைத் தலைவர் ஆர்.எம். ஜெயசிங்க தெரிவித்தார்.
எனினும் மொனராலையில் எந்தவொரு பாடசாலையும் மூடப்படவில்லை எனவும் நகரத்தைச்சுற்றி தனிமைப்படுத்தல் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
- Previous பண்ணையாளர்கள் மீது சிங்களவர்கள் மிக மோசமான செயல்
- Next யாழில் வீடொன்றில் கொள்ளை அடித்த பெண் மடக்கி பிடிக்கப்பட்டார்
You may also like...
Sorry - Comments are closed