யாழ் நகர திரையரங்கு சீல் வைக்கப்பட்டது

சுகாதார நடைமுறைகளை மீறியதாக யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள திரையரங்கு ஒன்று சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள திரையரங்கே இன்று நண்பகல் முதல் சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டது.
நாட்டின் திரையரங்குகளை இருக்கைகளின் எண்ணிக்கையில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதித்து இயங்க அரசு ஒப்புதல் வழங்கியிருந்தது.
எனினும் யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள குறித்த திரையரங்கு முழுமையான இருக்கைகளுக்கு பார்வையாளர்களை அனுமதித்து ரிக்கெட்டுக்களை விற்பனை செய்திருந்தது என்று சுகாதாரத் துறையினரால் கண்டறிப்பட்டது.
அதனாலேயே அந்த திரையரங்கு சுகாதார நடைமுறைகளுக்கமைய மூடப்பட்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
- Previous யாழில் வீடொன்றில் கொள்ளை அடித்த பெண் மடக்கி பிடிக்கப்பட்டார்
- Next பெறுமதி வாய்ந்த இரத்தின கல் கண்டுபிடிப்பு
You may also like...
Sorry - Comments are closed