5 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை

ஐந்து வயது சிறுமியை மனிதாபிமானமற்ற முறையில் துஷ்பிரயோகம் செய்த குற்றத்தில் 41 வயதான இரு பிள்ளைகளின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் தனது மனைவியிடமிருந்து பிரிந்துவிட்டதாகவும், துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமியின் தந்தை தோட்டத் தொழிலாளி எனவும் தெரியவந்துள்ளது.

சிறுமி ரக்வான பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது அவர் சிறுமியை ஏமாற்றி அருகிலுள்ள புதருக்கு அழைத்துச் சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில் ரக்வானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: