இரணைமடு குளத்தின் நீர்மட்டம் தற்போது 37 அடி 05 அங்குலத்தைத் தாண்டும் நிலையில் உள்ளது

கிளிநொச்சி – இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 37அடி 05 அங்குலமாக அதிகரித்து வான் கதவுகள் ஊடாகவும், வான் வழியாகவும் வெளியேறும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் மேலும் சில தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கிளிநொச்சி, இரணைமடு குளத்தின் நீர்மட்டம் தற்போது 37 அடி 05 அங்குலத்தைத் தாண்டும் நிலையில் வான் கதவுகள் தொடர்ந்தும் திறந்து விடப்பட்டு இருப்பதுடன், அதிகளவு நீர் வெளியேறி வருகிறது.

இதனால் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.முரசுமோட்டை ஐயன் கோயிலடி கிராமத்திவெள்ள நீர் புகுந்ததால் ஐந்து குடும்பங்கள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளன.

இதேவேளை, இந்தப் பிரதேசத்தில் மேலும் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குவதால் தமது கால்நடைகளையும் உடைமைகளையும் கொண்டு மக்கள் வெளியேறிவருகின்றனர்.

வரத்து நீர் விகிதம் காரணமாக, இரணைமடு குளத்தின் திறக்கப்பட்டுள்ள கதவுகளின் அளவு அதிகரிக்கப்படும். எனவே முரசுமோட்டை, கண்டாவளை மற்றும் ஊரியான் பகுதிகளில் வாழும் மக்கள் தயவுசெய்து எச்சரிக்கையாக இருக்குமாறும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: