பிரித்தானியாவின் முக்கிய நபர் தனது சொந்த விமானத்தில் திடீர் விஜயம்

பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த நிதியாளரும் ரோத்ஸ்சைல்ட் குடும்ப உறுப்பினருமான நதானியேல் ரோத்ஸ்சைல்ட் (Nathaniel Rothschild) தனது தனியார் ஜெட் விமானத்தில் இலங்கைக்கு வந்துள்ளார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
நாட்(Nat) என்று பிரபலமாக அறியப்படும் 49 வயதான இவர், பல நூற்றாண்டுகள் பழமையான ஐரோப்பிய வங்கி வம்சத்தின் வாரிசாவார்.
சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட நாட், நிர்வாகத் தலைவராகவும், உலகளாவிய ஒருங்கிணைந்த உற்பத்தி நிறுவனமான இங்கிலாந்து பட்டியலிடப்பட்ட வோலெக்ஸ் பி.எல்.சியின் (Volex PLC)யின் மிகப்பெரிய பங்குதாரராகவும் உள்ளார்.
அவர் கொழும்பில் ஒரு சில முன்னணி உள்ளூர் வர்த்தகர்கள் மற்றும் கார்ப்பரேட் தலைவர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வியாழக்கிழமை கொழும்பு போர்ட் சிட்டிக்கு வருவார் என்றும் குறித்த ஆங்கில ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
- Previous இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்
- Next கிளிநொச்சி மாவட்டத்தில் நீரில் மூழ்கி பல ஏக்கர் வயல்கள் அழிவடைந்துள்ளது
You may also like...
Sorry - Comments are closed