இலங்கையில் டயர் உற்பத்தி தொழிற்சாலை திறந்து வைப்பு

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய டயர் உற்பத்தி தொழிற்சாலை இன்று ஹொரனையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஹொரனையில் உள்ள வாகவத்தை ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தில் இந்த டயர் உற்பத்தி தொழிற்சாலை திறக்கப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்தார்.

ஹொரனையில் 155 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 3000 நேரடி வேலை வாய்ப்புகளையும், மூன்று மடங்கு மறைமுக வேலை வாய்ப்புகளையும் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலை ஐரோப்பிய மற்றும் பிற சர்வதேச சந்தைகளுக்கான தொழில்துறை அளவிலான டயர்களுடன் பயணிகள் கார் டயர்களையும் உற்பத்தி செய்யும்.

250 மில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் முதல் கட்டம் நிறைவடைந்துள்ளது, அதே நேரத்தில் இரண்டாம் கட்டம் மார்ச் 2021 இல் தொடங்குவதற்கு தயாராக உள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: