கிளிநொச்சியில் குடும்ப பெண் வெட்டி கொலை

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெளிகரை பகுதியில் குடும்ப பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தெளிகரையில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். வயிற்று பகுதியில் வெட்டு காயங்களுடன் பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 37 வயதுடை ரூபஸ் கிருஸ்ணகுமாரி என்ற 3 பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணின் வயிற்று பகுதியில் வெட்டு காயங்கள் காணப்படுவதுடன் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை சம்ப இடத்திலிருந்து கூரிய ஆயுதமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை பூநகரி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்த பெண்ணின் சடலம் நீதவான் பார்வையிட்டதன் பின்னர் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும் எனவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
- Previous இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்
- Next க.பொ.த உயர்தர பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரலில் வெளியிடப்படவுள்ளது
You may also like...
Sorry - Comments are closed