க.பொ.த உயர்தர பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரலில் வெளியிடப்படவுள்ளது

கடந்த 2020ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரலில் வெளியிடப்படவுள்ளதாக கல்விய அமைச்சர் பேராசிாிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மல்வத்து அஸ்கிரிய தேரரை இன்று சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக் கழகத்திற்கு தகுதிபெறும் மாணவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் பல்கலைக் கழகங்களுக்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வர்.
இதேவேளை, எதிர்வரும் மார்ச்சில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் இதற்கான பெறுபேறுகளை ஜூனில் வெளியிட நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
- Previous கிளிநொச்சியில் குடும்ப பெண் வெட்டி கொலை
- Next கணவன் – மனைவி சண்டை துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது
You may also like...
Sorry - Comments are closed