சசிகலா விடுதலையாகும் திகதி அறிவிக்கப்பட்டது

சசிகலா விடுதலையாகும் திகதி உறுதியாகிவிட்டதாக, வழக்கறிஞர் ராஜா செந்துர்பாண்டியன் கூறியுள்ளார்.
சொத்துகுவிப்பு வழக்கு காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, 4 ஆண்டுகள் சிறை தண்டனை காலம் முடிவடைந்து விரைவில் வெளிவரவுள்ளார்.
ஆனால், அவர் விடுதலையாகும் திகதி மட்டும் உறுதியாகமல் இருந்தது.
இதையடுத்து தற்போது வரும் 27-ஆம் திகதி சசிகலா விடுதலையாவது உறுதி எனவும் அதன் அலுவல்பூர்வ கடிதம் கிடைத்துவிட்டதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், அதை சசிகலாவின் வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார்.
மேலும், சசிகலா வரும் 27-ஆம் திகதி காலை 10 மணிக்கு விடுதலை செய்யப்படுகிறார் எனவும், இது தொடர்பாக கர்நாடக மாநில சிறைத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக வழக்கறிஞர் ராஜா செந்துர்பாண்டியன் கூறியுள்ளார்.
இந்த செய்தியை அறிந்தவுடன் சசிகலா உறவுகள் மற்றும் தொண்டர்கள் பலரும் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.
- Previous தாய்- மகள் விஷம் குடித்து பலி
- Next கர்ப்பிணியை தாக்கும் கொரோனா பிறக்கும் குழந்தைக்கும் வர வாய்ப்பு உள்ளது
You may also like...
Sorry - Comments are closed