இந்திய நீதிமன்றம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு அபராதம் விதித்தது ஏன்?

இந்திய சட்டத்தை பின்பற்றாத குற்றத்துக்காக, இலங்கையின் தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு இந்திய நீதிமன்றம் 50,000 ரூபா அபராதம் விதித்துள்ளது.

புதுடில்லியின் நீதிமன்றம் ஒன்றே இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. தொழில் செய்யும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் “போஷ்” சட்டத்தின் கீழ் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த “போஷ் சட்டம்” சட்டத்தின் பிரிவு 26இன் கீழ் அதிகபட்சமாக ஐம்பதாயிரம் இந்திய ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

இதன் அடிப்படையில் விமான நிறுவனத்தின் நடத்தையை கருத்திற்கொண்டு, நீதிபதி இந்த அதிகபட்ச அபராதத்தை விதித்தார்.

ஏற்கனவே மற்றொரு பெண் தொடர்பான வழக்கில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பிராந்திய மேலாளர் லலித் டி சில்வா 2020, செப்டம்பர் 16 ஆம் திகதி இதே நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: