யாழில் பேருந்து காருடன் மோதியதில் இருவர் படுகாயம்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து காரொன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்து நேற்று இரவு சுமார் 11.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பேருந்து பயணிகளை இறக்கிய பின் கோண்டாவில் சாலைக்கு செல்லும்போது, ஆணைப்பந்தியூடாக இலுப்பையடிச் சந்தியை கடந்த கார் மீது மோதியுள்ளது.
இந்த சம்பவத்தில் காரில் பயணித்தவர்களில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் கார் கடுமையாக சேதமடைந்துள்ளது.
விபத்தில் தொலைபேசி கம்பம், மின்விளக்கு கம்பம் மற்றும் அருகிலிருந்த பேருந்து தரிப்பு நிலையம், ஆடைகள் விற்பனை நிலையத்தின் முகப்பு என்பனவும் சேதமடைந்துள்ளன.
இதனால் ஆடைகள் விற்பனை நிலையத்திற்குள் உறங்கிக் கொண்டிருந்த ஒருவரும் தலையில் கடும் காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை பேருந்து மோதிய காரில் பயணித்தவர்கள் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் இவர்கள் அலுவலக விடயமாக யாழ்ப்பாணத்திற்கு வந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் காயமடைந்த காரில் பயணித்த நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
- Previous நீர்கொழும்புபிரதேசத்தில் வீடு உடைத்து அகற்றப்பட்டதன் காரணமாக நிர்கதியான குடும்பம்
- Next இலங்கையில் நாய்களிடையே பரவும் வைரஸினால் பல நாய்கள் மரணம்
You may also like...
Sorry - Comments are closed